தமிழர் திருமணங்களுக்கு சென்றால் நிச்சயமாக இந்த வாழ்த்து உங்களின் காதில் விழும். "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று.
சிறு வயதில் இப்படி வாழ்த்தை கேட்டால் "பதினாறு பிள்ளைகள் பெற சொல்றாங்களோ" என்று நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ததுண்டு.
ஆமாம் இந்த பதினாறும் என்றால் என்ன? பதினாறு பேறு (செல்வங்கள்) என்பது மட்டும் தெரியும். ஆனால் இந்த செல்வங்கள்தான் என்ன. எனக்குள் தூங்கி இருந்த அந்த ஜேம்ஸ் பாண்டை எழுப்பி விட்டேன்.
சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு போன பொது அப்படி சொல்லி மணமக்களை வாழ்த்திய ஒரு பெரியவரை பிடித்து கேட்டப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா. "பரம்பரை பரம்பரையாய் இப்படித்தான்பா வாழ்த்துறோம். முதியோர்கள் சொன்னால் நல்லதாகத்தான் இருக்கும். அதுக்கு காரியம் காரணம் எல்லாம் ஆராய கூடாது".
என்னடா இது பெரிய வம்பா போச்சு.. தெரிந்துக்கொள்ளலாம்னு கேட்டால் இப்படி சொல்லிட்டறேன்னு வருத்தம். ஆனாலும் "தனது முயற்சியிலிருந்து சிறிதும் தவறாத விக்கிரமாதித்தன் போல்" நானும் எனது ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.
அப்படி அலைந்த போதுதான், என் நண்பன் ஒருவன் திருநள்ளாறு கோவிலில் பார்த்ததாக இந்த போட்டோவை கொடுத்தான். இதில் அந்த பதினாறு செல்வங்களை பற்றியும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
பணம் பொருள்தான் செல்வம் என நினைக்கும் இந்த காலத்தில் எது உண்மையான செல்வம் என்பதை. பாருங்கள் நம் முன்னோர்கள் எவ்வளவு அர்த்தப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள் என்று..
இந்த கட்டுரைக்கு காரணமாக இருந்த சித்தி முனிராவுக்கு நன்றி.