பெண்களுக்கு மார்பு கச்சை (Bra) அத்தியாவசியமான ஆடைகளில் ஒன்று. தேவைக்கு என்று ஆரம்பித்த இது இப்பொழுதெல்லாம் அலங்கார பொருட்களில் ஒன்றாகிவிட்டது.
வித விதமான கச்சைகள் இப்பொழுது காலத்திற்கேற்ப தினம் தினம் பல்வேறு உருவில் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி சாதரணமாக உள்ள ஒன்று ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் இது நடந்தது யூ எஸ்சில் உள்ள டெட்ராய்ட்(Detroit) என்ற நகரில். அங்குள்ள 57 வயது பவுச்டினா கிரீன் (Faustina Green) என்ற மாது தமது பக்கத்து வீட்டில் 3 இளைஞர்கள் அத்து மீறி நுழைவதை கண்டார்.
கொள்ளையர்கள் தங்களது இலக்கை வெற்றிகரமாக முடித்து விட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது, அந்த மாது தங்களை பார்ப்பதை அறிந்த கொள்ளையர்களில் ஒருவன் அந்த மாதின் மார்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால் அந்த குண்டு அவரை சிதைக்காமல் அவரின் மேல் பட்டு விலகி சென்றது (இங்கு நடிகர் விஜயகாந்த் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல) .
கொள்ளை செய்தி அறிந்த வந்த காவலர்கள் இந்த செய்தி அறிந்து விசாரிக்க அவர் அணிந்து இருந்த மார்பு கச்சை தான் அவரின் உயிரை கைப்பற்றியதை அறிந்தார்கள். இதை பற்றி மேலும் கூறிய அந்த காவலர்கள் அவர் அணிந்து இருந்தது அண்டர் வயர் மார்பு கச்சை (Under wire) என்று அதில் உள்ள அந்த வயர்தான் குண்டை தடுத்தது என்றும் கூறினார்கள்.
இதை அறிந்த அங்குள்ள மக்கள் "அது நிச்சயமாக ஒரு அற்புதமான மார்பு கச்சைதான். இனிமேல் நாங்கள் இந்த வகை கச்சை தான் வாங்க போகிறோம்" என்று கூறினார்களாம்.
ஆக மார்பு கச்சை மானத்தை மட்டும் அல்ல, உயிரையும் காப்பாற்றும் என்பதை இங்கு உரக்க கூவிக்கொள்கிறேன்.ஆமாம் கமெண்டு கூட போடாமல், அப்படி எங்க நீங்க அவசரமாய் போறீங்க? என்னது அண்டர் வயர் மார்பு கச்சை வாங்கவா?
நல்லா இருங்கப்பூ.