டிஸ்கி: ஏன்பா.. எப்பொழுதும் ஜாலி பதிவு தானா? கொஞ்சம் சீரியஸா எழுதக்கூடாதா என்று கேட்ட என் வலையுலக நண்பர்களுக்கு இது சமர்ப்பணம்.
உங்களை சுற்றி பாருங்கள். (சுத்தி இல்லப்பா..) எங்கு பார்த்தாலும் பொருளியல் சுருங்கி விட்டது. வேலைகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இருக்கும் வேலைக்கே ஆபத்து என கூக்குரல்கள்.
உலகத்தில் நடப்பதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியல்லைன்னாலும், பொருளியல் தாக்கத்தினால் ஏற்படும் இந்த சுனாமியிலிருந்து எப்படி பாது காத்து கொள்ளோணும் என்பது நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சமாச்சாரம். இல்லையென்றால் மன உளைச்சலும் அதனால் ஏற்படும் நோய்களும் தான் மிச்சம். வருமானமே குறைவாக உள்ள இந்த கால கட்டத்தில், டாக்டருக்கு வேறு அழனுமா என்ன?
சரி சரி என்ன செய்யலாம் சொல்லு என்றுதானே கேட்க்குறீங்க.. இதோ பிடியுங்கள் முத்துக்கள் மூன்று.
1. தேவைகளை குறைத்து கொள்ளணும். தேவைகளே குறைக்க சொல்லும் போது ஆசைகளை பத்தி யாருப்பா அங்கே பேசுறது.. மூச்..
2. வரவுக்கேத்த செலவு என்பதை மாற்றி வரவின் பாதி தான் செலவு என்று மாற்றிகொன்று வாழ வேண்டும். 10 டாலர் சம்பாதித்தால், 5 டாலர் தான் செலவு செய்யோணும். மீதியை பற்றி பேச கூடாது. பத்திரமா அதை வங்கியில் போடலாம். கஷ்ட காலத்தில் உதவும்.
3. முக்கியமாக எது செய்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளை குடும்பத்தில் நன்கு விளக்கி (யாருப்பா அது சோப்பு தூள் தேடுறது..) அவர்களின் ஆதரவோடு செய்யனும்.
இதெல்லாம் கடை பிடித்தால், இந்த பிரச்சினையெல்லாம் நமக்கு ஜுஜுபீ.
இந்த நேரத்தில் பொருளியல் மோசத்தை கூற ஒருவர் கூறியதை இங்கு கூறனும்.
"பொருளியல் மிகவும் மோசம் எப்படின்னா -
அமெரிக்க குழந்தையை தத்து எடுத்துக்கோங்க என்று
ஆப்பிரிக்க டீவியில் விளம்பரம் வருகிறது"
Subscribe to:
Posts (Atom)