பிக் பாக்கெட்காரர்கள் இடமிருந்து மீட்க புதிய காலனி

இந்த காலத்தில் பிக் பாக்கெட்காரர்கள் ரொம்பவும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். எவ்வளவு மறைவான இடத்தில் வைத்திருந்தாலும் அதையும் சுலபமாக லவட்டி விடுகிறார்கள். அவர்களிடமிருந்து நம் பணத்தை எப்படித்தான் பாதுகாப்பது?

அதற்கு பதில் சொல்லத்தான் இந்த புதிய செருப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் கால்பகுதியில் ஒரு அறை உள்ளது அதில் நீங்கள் மிகவும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் பொருளை (அதற்க்காக உங்க வீட்டையெல்லாம் இதனுள் வைக்க முடியாது) இதனுள் வைத்து விட்டால் போதும். உங்கள் பொருள் பாதுகாப்பாக இருக்கும் .

முக்கியாமாக ஒன்று சொல்ல மறந்து விட்டேனே.. இதை கல்யாணத்தில் வைத்துவிட்டு காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..


போட்டோ அனுப்பிய சகோதரர் சித்திக்கிற்கு நன்றி.


பாப்கார்ன்

கைதொலைபேசிகளின் எண்ணிக்கை (அதாங்க இந்த செல்போன்) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அது இல்லை என்றால் சிலர் வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டது போல எண்ணுகிறார்கள்.

அப்படி வாழ்க்கையின் அங்கமாகி விட்ட இந்த கை தொலை பேசிகளை எப்படி பயன்படுத்துகிறோம்? சிலர் தங்களது கைப்பையில் வைத்து கொள்கிறார்கள். பலரோ தங்களது பேன்ட் பாக்கெட்டில் முக்கியமாக ஆண்கள். பேண்ட்டில் திரியும் இந்த நவ நாகரிக மங்கைகளும் இதில் அடக்கம். வேறு சிலரோ tie மாதிரி தொங்க விட்டுக்கொள்கிறார்கள். மிகவும் அவசியமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஹே என்ன சொல்ல வருகிறாய் என்று தானே கேட்கிறீர்கள். இதோ விசயத்திற்கு வருகிறேன்.

கை தொலைபேசியிலிருந்து வரும் கதிரியக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. முக்கியமாக அது உபயோகத்தில் இருக்கும் போது. அது எவ்வளவு மோசமானது என்பதை பின் வரும் வீடியோவில் காணுங்கள்.


புதிய வேகத்தடை சாதனம்

சாலைகள் எங்க பாட்டன் வீட்டு சொத்து என்று நினைத்து தாறுமாறாக வாகனம் ஓட்டுவதும், அதனால் அன்றாடம் சாலை விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது.

அதை பல நாடுகளில் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வேகத்தடை கேமராக்கள், சாலை போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஆகியவை இவற்றுள் அடங்கும். அப்படியும் கட்டு கடங்காமல் திரிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அவர்களுக்கானவ வேகத்தடை சாதனம்தான் நீங்கள் இங்கே காணப்போகும் விஷயம்.


இந்த குண்டும் குழியுமான சாலையில் யாருக்காவது மின்னல் வேகத்தில் செல்ல விரும்புவார்களோ?

.

.

.

.

எவ்வளவு புதுமையான செலவு குறைந்த வழி பாருங்கள்.

அமெரிக்காவின் டாலர்

அமெரிக்காவின் பண மதிப்பு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மெலிந்து கொண்டிருக்கும் வேளையில் அதை பற்றி சகோதரர் சித்திக் அனுப்பிய கார்ட்டுன்.

டாலருக்கே தன் நிலையை நினைத்து கவலையாக இருக்கிறதாம்.


இன நிற வேற்றுமைக்கு எதிராக ஒரு சவுக்கடி

இன வேற்றுமைக்கு எதிராக பல நாடுகளும் பல நேரங்களில் குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், அங்கெங்கே இன துவேசங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை எப்படி முழுமையாக ஒழிப்பது என்று பலரும் பல விதமாக முயன்று கொண்டிருக்கும் வேளையில் இதோ ஒரு அழகிய உதாரணம்.

பிரிட்டிஷ் தாயிற்கு 2000-இல் பிறந்த இரட்டை குழ்ந்தைகளை பாருங்கள். ஒன்று கருப்பு இனமாகவும் ஒன்று வெள்ளை இனமாகவும் பிறந்துள்ளதை.

தாய் தகப்பன் இருவருமே ஒரு கலப்பு திருமணத்தில் உதித்தவர்கள். (வெள்ளை இன தாய், கருப்பு இன தகப்பன்)



வினோத பொருட்கள்

"ஜப்பானில் தான் இது நடக்கும்" என கூறி நண்பரிடமிருந்து ஒரு ஈ மெயில் வந்தது.. அது இதோ உங்களின் பார்வைக்கு..

காதலன் இல்லாமல் தூங்க முடியவில்லையா? உங்களின் கவலை தீர்க்க இதோ..


என்னது மூக்கு ரொம்ப ஒழுவுகிறதா.. எவ்வளவு கைக்குட்டை எடுத்து செல்வது என புலம்புபவரா நீங்கள்... உங்களுக்காக

இந்த மழை நான் புது செருப்பு போட்டு செல்லும்போதுதான் வரணுமா.. அவ்வளவுதான் என் செருப்பு என வருந்துபவரா..


என்னது உங்கள் அருமை குழ்ந்தை காலை ரொட்டி சாப்பிட அடம் பிடிக்கிறதா.. உங்கள் கவலை தீர்க்க..


அவசரமாக ஆபீஸ் போகணும். சாப்பிடாமலும் போக முடியாது ஆனா இந்த உணவு இப்படி கொதிக்கிறதே.. அதுதானே உங்கள் கவலை.. உங்களுக்காக இதோ..



இந்த ட்ரைனில் போகும் நேரமாவது துங்கலாம் என்றால் இப்படி ஆடி ஆடி பக்கத்தில் உள்ளவரின் மேல் விழுந்து விடுவோமோ.. உங்கள் கவலை தீர்க்க







உங்கள் பிரட்டின் மேல் பட்டர் எளிதில் தடவ..


ஆமாம் உங்களுக்கு பிடித்த பொருள் எது..??



சோயா பீன் சாப்பிடுபவர்களுக்கு உயிர் அணு குறையும்


கேன்செர் உருவாவதை தடுக்கும்னும், உயர் அழுத்தத்தை கட்டுப்படுத்தும்னும் கூவி கூவி வித்ததாலே நான் என் உணவில் சோயா பீன் உணவை பெரும்பாலும் சேர்த்து சாப்பிடுவேன்..


ஆனால் அதுக்கு மணி அடிக்கிற மாறி அமெரிக்காவிலே ஒரு ஆராய்ச்சி செய்திருக்கானுவோ.. அது என்னன்னா..


சோயா பீன் சாப்பிடுபவர்களையும் சாப்பிடுபவர்களையும், சாப்பிடதவர்களையும் அவர்களின் உயிர் அணுவை (Sperm) எடுத்து சோதனை செய்திரிக்கானுவோ.. (பாருங்க இவங்களின் வேலையை..) முடிவு என்ன ஆச்சின்னா சோயா பீன் சாப்பிட்டவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கை சோயா பீன் சாப்பிடதவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததாம்.. மேலே சோதிச்சதிலே, சோயா பீனில் பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் "ஈஸ்ட்ரஜன்" (Oestrogen) அதிகமாக இருந்தது தெரிய வந்ததாம்.


ஒரு ஆண்மகனுக்கு உயிர் அணுவின் எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு 80 முதல் 120 மில்லியன் இருக்கும். 20 மில்லியனுக்கு குறைந்தால் அவர் மூலம் வாரிசு உண்டாகுவது கடினம்..


இந்த சோயா பீனானது இந்த உயிர் அணுக்களின் எண்ணிக்கையை குறைக்க வல்லதாம்.. ஆக அதிகம் சோயா பீன் சாப்பிட்டால் அவ்வளவுதான் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்..
ஆண்மகன்களே உசாரயிருங்கள். இல்லன்னா குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை இல்லாமலே, எல்லாம் முடிந்து விடும்..

எப்படி எல்லாம் பீதியை கிளப்புறாங்கப்பா..
இனிமேல் நான் சோயா பீன் சாப்பிடுவேன்..??
பாவம் இந்த சோயா பீன் கடைகள்..