படித்ததில் பிடித்தது..


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சமபாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
நன்றி: சகோதரர் சித்திக்

தாகம் தீர்க்கும் பறவை.

யார் சொன்னது பறவைகளுக்கு சிந்திக்கும் சக்தி இல்லை என்று?

இங்கே பாருங்கள் தாகம் எடுக்கும் தன் சக தோழிக்கு, எப்படி அருமையாக தண்ணீர் திறந்து விடுவதை. அதுவும் எப்படி? அதற்க்கு தேவையான அளவு.
இதையெல்லாம் காணும் பொழுது, மனிதர்களை விட பறவைகள், மிருகங்களே மேல் என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

யோகா கற்பிக்கும் சிறுவன்

பல வித நோய்களையும் கட்டுக்குள் வைக்கும் ஒரு அறிய பயிற்ச்சி, நம் முன்னோர்கள் அறிமுகப்படுத்திய "யோகா".

உடற்பயிற்ச்சி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நான், யோகா பயிற்சியின் போது அந்த பயிற்ச்சிகளை சரி வர செய்ய இயலாமல் கஷ்டப்பட்டதும் (சும்மா சொல்ல கூடாது எங்கள் வகுப்பில் எல்லோருமே கஷ்டப்பட்டோம்), ஒரு சிறுவன் எல்லா ஆசனங்களையும் அழகாக செய்ததும் ஞாபகம் வருகிறது.

அப்படி சிறந்த முறையில் செய்யும் ஒரு சிறுவனே வகுப்பு ஆசிரியராய் வந்தால்..

மயக்கும் இறகு ஓவியங்கள்

பறவைகள் பார்க்க பார்க்க திகட்டாதவை. அதற்கு முக்கிய காரணமாக விளங்குபவை அதன் அழகிய சிறகுகள். உதிர்ந்து கிடக்கும் அவற்றை "பொக்கிசமாக" சிறுவயதில் பாதுகாத்து வந்தது ஞாபகம் வருகிறது.

அப்படி சாதாரணமாக கிடக்கும் சிறகுகளே அழகாக இருக்கும் போது, அதில் அழகுக்கு அழகு சேர்த்தால் போல் வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்தால், அட அட நினைத்தாலே இன்பமாக உள்ளது அல்லவா?

பார்த்து மகிழுங்கள். கண்ட பின் தாங்கள் இன்ஸ்டன்ட் தத்துபித்து கவிஞர் ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல.


அமெரிக்காவின் தேர்தலில் உபயோகித்தால் வெற்றி நிச்சயம்.

பறவைகள், விலங்குகள் பார்க்க பார்க்க பரவசம்.

பனி கரடிகள், மீன்கள் கூட.


துரத்தும் நரிகள், உடற்பயிற்சியை வலியுறுத்தும் கரடிகள் .

குடும்ப ஒற்றுமையை எடுத்து காட்டும் பறவைகள், விலங்குகள் .


என்னது போதவில்லையா, இதோ மேலும்.

பறவைகள், விலங்குகள் சரி, மனிதர்கள் எங்கே என்று கேட்ப்பவர்களுக்காக இதோ.





அழகு ஓவியங்களை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சுரேசுக்கு நன்றி.




பதினாறும் பெற்று ...

தமிழர் திருமணங்களுக்கு சென்றால் நிச்சயமாக இந்த வாழ்த்து உங்களின் காதில் விழும். "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று.

சிறு வயதில் இப்படி வாழ்த்தை கேட்டால் "பதினாறு பிள்ளைகள் பெற சொல்றாங்களோ" என்று நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ததுண்டு.

ஆமாம் இந்த பதினாறும் என்றால் என்ன? பதினாறு பேறு (செல்வங்கள்) என்பது மட்டும் தெரியும். ஆனால் இந்த செல்வங்கள்தான் என்ன. எனக்குள் தூங்கி இருந்த அந்த ஜேம்ஸ் பாண்டை எழுப்பி விட்டேன்.

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு போன பொது அப்படி சொல்லி மணமக்களை வாழ்த்திய ஒரு பெரியவரை பிடித்து கேட்டப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா. "பரம்பரை பரம்பரையாய் இப்படித்தான்பா வாழ்த்துறோம். முதியோர்கள் சொன்னால் நல்லதாகத்தான் இருக்கும். அதுக்கு காரியம் காரணம் எல்லாம் ஆராய கூடாது".

என்னடா இது பெரிய வம்பா போச்சு.. தெரிந்துக்கொள்ளலாம்னு கேட்டால் இப்படி சொல்லிட்டறேன்னு வருத்தம். ஆனாலும் "தனது முயற்சியிலிருந்து சிறிதும் தவறாத விக்கிரமாதித்தன் போல்" நானும் எனது ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.

அப்படி அலைந்த போதுதான், என் நண்பன் ஒருவன் திருநள்ளாறு கோவிலில் பார்த்ததாக இந்த போட்டோவை கொடுத்தான். இதில் அந்த பதினாறு செல்வங்களை பற்றியும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

பணம் பொருள்தான் செல்வம் என நினைக்கும் இந்த காலத்தில் எது உண்மையான செல்வம் என்பதை. பாருங்கள் நம் முன்னோர்கள் எவ்வளவு அர்த்தப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள் என்று..

இந்த கட்டுரைக்கு காரணமாக இருந்த சித்தி முனிராவுக்கு நன்றி.


பிக் பாக்கெட்காரர்கள் இடமிருந்து மீட்க புதிய காலனி

இந்த காலத்தில் பிக் பாக்கெட்காரர்கள் ரொம்பவும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். எவ்வளவு மறைவான இடத்தில் வைத்திருந்தாலும் அதையும் சுலபமாக லவட்டி விடுகிறார்கள். அவர்களிடமிருந்து நம் பணத்தை எப்படித்தான் பாதுகாப்பது?

அதற்கு பதில் சொல்லத்தான் இந்த புதிய செருப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் கால்பகுதியில் ஒரு அறை உள்ளது அதில் நீங்கள் மிகவும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் பொருளை (அதற்க்காக உங்க வீட்டையெல்லாம் இதனுள் வைக்க முடியாது) இதனுள் வைத்து விட்டால் போதும். உங்கள் பொருள் பாதுகாப்பாக இருக்கும் .

முக்கியாமாக ஒன்று சொல்ல மறந்து விட்டேனே.. இதை கல்யாணத்தில் வைத்துவிட்டு காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..


போட்டோ அனுப்பிய சகோதரர் சித்திக்கிற்கு நன்றி.


பாப்கார்ன்

கைதொலைபேசிகளின் எண்ணிக்கை (அதாங்க இந்த செல்போன்) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அது இல்லை என்றால் சிலர் வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டது போல எண்ணுகிறார்கள்.

அப்படி வாழ்க்கையின் அங்கமாகி விட்ட இந்த கை தொலை பேசிகளை எப்படி பயன்படுத்துகிறோம்? சிலர் தங்களது கைப்பையில் வைத்து கொள்கிறார்கள். பலரோ தங்களது பேன்ட் பாக்கெட்டில் முக்கியமாக ஆண்கள். பேண்ட்டில் திரியும் இந்த நவ நாகரிக மங்கைகளும் இதில் அடக்கம். வேறு சிலரோ tie மாதிரி தொங்க விட்டுக்கொள்கிறார்கள். மிகவும் அவசியமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஹே என்ன சொல்ல வருகிறாய் என்று தானே கேட்கிறீர்கள். இதோ விசயத்திற்கு வருகிறேன்.

கை தொலைபேசியிலிருந்து வரும் கதிரியக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. முக்கியமாக அது உபயோகத்தில் இருக்கும் போது. அது எவ்வளவு மோசமானது என்பதை பின் வரும் வீடியோவில் காணுங்கள்.