நடுநிசி ஊரே வெறிச்சோடி கிடந்தது. அக்கம் பக்கம் யாருமில்லை.
பக்கத்தில் இருந்த மின்விளக்கும் இப்பொழுது அணைந்து விடுவேன் என பயமுறித்தி கொண்டிருந்தது. கண்ணனுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் தைரியமும் போய் கொண்டிருந்தது. "இந்த நேரத்தில் வெளியில் போகதடா. அப்படி போனாலும் முக்கியமாக கோயில் பக்கம் நிற்காதே" என்று அம்மா சொன்னார்.
பக்கத்தில் இருந்த மின்விளக்கும் இப்பொழுது அணைந்து விடுவேன் என பயமுறித்தி கொண்டிருந்தது. கண்ணனுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் தைரியமும் போய் கொண்டிருந்தது. "இந்த நேரத்தில் வெளியில் போகதடா. அப்படி போனாலும் முக்கியமாக கோயில் பக்கம் நிற்காதே" என்று அம்மா சொன்னார்.
இந்த பாழா போற வயிற்று பசி இந்த நேரத்தில்தான் வரணுமா? அதுவும் அம்மா எதாவது செய்து தரேன் என்று சொல்லியும் கேட்காமல் இவ்வளவு தூரம் வந்தேனே.. அதுவும் இந்த ஸ்டுபிட் பைக் பாதியில் இப்படி மக்கர் செய்து விட்டதே. யாராவது வந்தாலும் லிப்ட் கேட்கலாம் ஆனால் இங்கு ஈ எறும்பு கூட காணோமே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ வருவது போல இருந்தது. நல்ல வேலை இவரிடம் எப்படியாவது லிப்ட் கேட்டு இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்து கொண்டான்.
லிப்ட் கேட்க கையை நீட்ட அந்த பைக் நின்றது. அந்த ஆள் பார்ப்பதற்கு கொடுரமாக இருந்தான். "என்ன வேண்டும்?" கொடுர குரல். என்ன செய்வது வேறு வழி இல்லை எப்படியாவது இங்கிருந்து போனால் சரி என்று அவரிடம் பேசி அவர் வண்டியில் சென்றான்.
பாதி வழியில் செல்லும் பொழுது "ஈ உம்" என்று பல்வேறு விதமான ஒலிகள் ஒட்டுபவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. சாதரணமாக வண்டியை ஒட்டாமல் நெளித்து நெளித்து வேறு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தான். தப்பான வண்டியில் ஏறி விட்டோமே என்று உயிரை பிடித்து கொண்டு கண்ணன் உட்கார்ந்து கொண்டிருந்தான். வண்டி கோயிலுக்கு அருகே வந்தவுடன் திடீர் என சடர்ன் பிரேக் அடித்து வண்டியை நிப்பாட்டினான். இன்று நாம் தொலைந்தோம் என்று கண்ணன் கலங்கி கொண்டிருந்தபோது அவன் கொடூர குரலில் சொன்னான்.
"ஒன்னுடைய சாப்பாட்டு பார்சலை கொஞ்சம் நகர்த்தி வைத்து கொள்கிறாயா. ரொம்ப சுடுது"
0 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:
Post a Comment