அமெரிக்காவின் தனிமை சிறையில் வாடும் ஒரு இந்தியர்

நேற்று இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். அதை பாங்குடன் நடத்தும் "ரமேஷ்" என்பதிலிருந்து ரோஸ் ஆக மாறியவருக்காக அல்ல அதில் எடுத்துக்கொள்ளப்படும் Controversy விஷயங்கள். Anyway அந்த நிகழ்ச்சிக்கு நான் பரம விசிறி.
நேற்றைய நிகழ்ச்சியில் நாகர்கோவிலிருந்து அமெரிக்கா சென்ற ஆனந்த் ஜோன்ஸ் என்பவரை பற்றி பேசப்பட்டது. ஆனந்த் அங்கு ஒரு மிக சிறந்த Fashion Designer (அலங்கார நிபுணர்!!) . ஹாலிவூட் நடிகைகள் பலருக்கும் ஆடை வடிவமைத்த இளம் நிபுணர். அவர் இப்பொழுது அமெரிக்காவின் தனிமை சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களால் குற்றம் சாற்றப்பட்டுள்ளார். இதில் சில பேர் 18 வயதிற்கும் கீழே உள்ளவர்களும் அடங்கும்.

அங்கு ஒரு இந்தியர் முன்னேறுவது தாங்காமல் தான் அவர் மேல் போலி குற்றம் சாற்றப்பட்டிருப்பதாகவும்,trial கூட இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமை சிறையில் ஒரு போர்வை கூட இல்லாமல் வாடுவதாக அவரது அக்காள் சஞ்சனா ஜோன்ஸ் கண்கலங்க அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

எது எப்படியோ, அவர் குற்றம் செய்தவரோ இல்லையோ, தனி மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சீக்கிரம் அவர் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும். மேலும் சஞ்சனா கூறுவது போல் நிற துவேசம் இருக்குமேயானால் அதை கழைய அந்த அரசு முயல வேண்டும் என்பதே எல்லோரின் அவா.

0 நண்பர்கள் பூசை செய்றாங்கோ: