அட்ராடா நாக்க முக்க..

(டிஸ்கி: என்ன புது பதிவே இல்லை என்று உரிமையோடு ஈமெயில் அனுப்பிய தம்பி சித்திக்கின் வேண்டுகோளை ஏற்று)

சின்ன வயசிலே, "உன்னாலே (உன்) நாக்கால் (உன்) மூக்கை தொட முடியுமா?" என்று கேட்பதும், கேட்க்கப்படுவதும் - அதற்காக சற்றும் தளரா விக்கிரமாதித்தன் போல் பல முயற்சி செய்வதும் உண்டு. என்னதான் முயன்றாலும் மூக்கை கொஞ்சமாவாது அழுத்தினால்தான், அதன் நுனியையாவது தொட முடியும்.

ஆனால் ஜெர்மனியில் ஹாம்பார்கு (Hamburg) அருகே வசிக்கும் இந்த 12 வயது சிறுமியோ வெகு இலகுவாக தன் நாக்கால் மூக்கை மட்டுமல்ல, நெற்றியையே தொட்டு விடுகிறார். ஆம் இந்த கின்னஸ் சாதனை படைத்த இவரது நாக்கின் நீளம் 7 cm.


சாதாரணமாகவே பெரும்பாலான பெண்களை அதிகம் பேசுவதால் "உனக்கு வாய் ரொம்ப நீளம்" என்று கூறுவதுண்டு. ஆனால் இவரிடம் கொஞ்சம் மாற்றி "உனக்கு நாக்கு ரொம்ப நீளம்" என்று சொல்வார்களோ.

ஹையோ ஹையோ. இது என்ன சின்னப்புள்ளை தனமா இருக்கு என்றெல்லாம் கேட்க்க கூடாது.

2 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:

Anonymous said...

//சாதாரணமாகவே பெரும்பாலான பெண்களை அதிகம் பேசுவதால் "உனக்கு வாய் ரொம்ப நீளம்" என்று கூறுவதுண்டு.//

இதை எப்படியா தைரியமா எழுதின? கண்ணாலம் ஆகலையா?

பூக்காதலன் said...

// Anonymous said...
//சாதாரணமாகவே பெரும்பாலான பெண்களை அதிகம் பேசுவதால் "உனக்கு வாய் ரொம்ப நீளம்" என்று கூறுவதுண்டு.//

இதை எப்படியா தைரியமா எழுதின? கண்ணாலம் ஆகலையா?
//

அதெல்லாம் ரகசியம் அனானி. இப்படி பப்லீக்கில கேட்கலாமோ?