கொத்து கொத்தாய்...

வாழைக்கொத்து பார்த்திருக்கிறீர்களா? இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.



கொஞ்சம் பொறுமையாக கீழுள்ள படத்தை கொஞ்சம் பாருங்கோ.. அப்புறம் தெரியும் இதில் என்ன புதுமை என்று.. பாருங்கள் அதிசயத்தை கொத்து மரத்திலிருந்து பூமி வரை எப்படி வளர்ந்துள்ளது என்று...



படத்தை அனுப்பிய சகோதரர் சித்திக்குக்கு நன்றி.

அமெரிக்காவின் தனிமை சிறையில் வாடும் ஒரு இந்தியர்

நேற்று இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். அதை பாங்குடன் நடத்தும் "ரமேஷ்" என்பதிலிருந்து ரோஸ் ஆக மாறியவருக்காக அல்ல அதில் எடுத்துக்கொள்ளப்படும் Controversy விஷயங்கள். Anyway அந்த நிகழ்ச்சிக்கு நான் பரம விசிறி.
நேற்றைய நிகழ்ச்சியில் நாகர்கோவிலிருந்து அமெரிக்கா சென்ற ஆனந்த் ஜோன்ஸ் என்பவரை பற்றி பேசப்பட்டது. ஆனந்த் அங்கு ஒரு மிக சிறந்த Fashion Designer (அலங்கார நிபுணர்!!) . ஹாலிவூட் நடிகைகள் பலருக்கும் ஆடை வடிவமைத்த இளம் நிபுணர். அவர் இப்பொழுது அமெரிக்காவின் தனிமை சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களால் குற்றம் சாற்றப்பட்டுள்ளார். இதில் சில பேர் 18 வயதிற்கும் கீழே உள்ளவர்களும் அடங்கும்.

அங்கு ஒரு இந்தியர் முன்னேறுவது தாங்காமல் தான் அவர் மேல் போலி குற்றம் சாற்றப்பட்டிருப்பதாகவும்,trial கூட இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமை சிறையில் ஒரு போர்வை கூட இல்லாமல் வாடுவதாக அவரது அக்காள் சஞ்சனா ஜோன்ஸ் கண்கலங்க அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

எது எப்படியோ, அவர் குற்றம் செய்தவரோ இல்லையோ, தனி மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சீக்கிரம் அவர் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும். மேலும் சஞ்சனா கூறுவது போல் நிற துவேசம் இருக்குமேயானால் அதை கழைய அந்த அரசு முயல வேண்டும் என்பதே எல்லோரின் அவா.

கம்பெனி கார்

வேலை பார்க்கும் எல்லோருக்கும், பல வித கனவுகள்.
அழகிய வீடு, போயி வர சொகுசு கார் என பல..

அதுவும் அந்த கார் ஒரு மெர்செடெஸ் பென்ஸ் காராக இருந்தால்..

அதில் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள இன்டர்நெட் வசதியுடன் ஒரு லாப் டாப் இருந்தால்..



கொஞ்சம் இளைப்பாற...


நண்பர்களுடன் கதை பேச, கான்பிரன்ஸ் வசதி ...

நண்பிகளுடன் முக்கியமான கம்பெனி விஷயம் (!) மட்டுமே பேச வசதி..



நிறுத்துங்கள் உங்கள் பகல் கனவை..

கிடைத்ததை வைத்து சந்தோசப்படுங்கள்..



அரிசி விலை ஆகாயத்தை நோக்கி

எங்கும் விலைவாசி ஏற்றம், எதிலும் ஏற்றம் என்பது வாடிக்கையாகி விட்டது. பணக்காரர்களுக்கு கவலை இல்லை. எதையும் எந்த விலை கொடுத்ததும் வாங்கி விடலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும்தான் இதனால் மிகவும் வருந்தவேண்டிய நிலையில் உள்ளனர்.

மற்ற பொருள்களை விடுவோம். அத்தியாவசிய பொருள்களான அரிசி கூட யானை விலை, குதிரை விலையில் விற்கிறது. இதை ஒட்டி சகோதரர் சித்திக் ஈ மைலில் அனுப்பிய கார்ட்டூன். நீங்கள் என்ன இதை பற்றி நினைக்கிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் சொல்லலாமே..


மாரடைப்பைத் தடுக்கும் இஞ்சி


சாப்பிடும்போது இஞ்சியை கடித்து விட்டால் அவசர அவசரமாக அதை வாயில் இருந்து வெளியில் எடுப்பவரா நீங்கள்? அப்படிஎன்றால் உடனே இந்த கட்டுரையை மேலே படியுங்கள். ஏனெனில் மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருக்கிறது.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆக இனிமேல் உங்களை யாரவது இஞ்சி தின்ற குரங்கு என்று சொன்னால் ஆத்திரப்படாதீர்கள். அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி

என்ன பூமியில் வாழ்ந்து போரடிக்கிறதா? செவ்வாய் கிரகத்திற்கு வர்றேங்களா என்று உங்கள் பயண முகவர் கேட்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. என்ன கதை உடுறான் என்று நெனைக்கதீங்கோ.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரமாக இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை விரிவாக ஆராய அமெரிக்காவின் நாசா, பீனிக்ஸ் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.பீனிக்ஸ் விண்கலம் அங்கு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. மே 25ம் தேதி பீனிக்ஸ் தரையிறங்கியபோது அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் தென்பட்டது. அது உப்பு அல்லது ஐஸ் கட்டியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதையடுத்து மேலும் 3 இடங்களில் பீனிக்ஸ் விண்கலம், மண்ணைத் தோண்டியபோது அங்கும் வெள்ளை நிறத்திலான பொருள் தென்பட்டது. தோண்டிய சிறிது நேரத்தில் இது சூரிய வெப்பத்தில் ஆவியாகி விட்டது. எனவே இது உப்போ அல்லது பாறையோ இல்லை, மாறாக ஐஸ் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் இருக்கிறது என்பதற்கான மிக முக்கியஆதாரம் இது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதை வைத்து மட்டும் செவ்வாய் கிரகம், மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் என்று கூறி விட முடியாது. உணவுப் பொருள் இல்லாத கிரகம், வாழத் தகுதியற்ற கிரகம் என்பது நாசா விஞ்ஞானிகளின் கருத்து. தொடர்ந்து ஆய்வு நடத்தி, செவ்வாய் கிரகத்தில் வேறு ஏதாவது கனிப் பொருட்கள் மறைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்யவுள்ளனர்.

செவ்வாயில் ஐஸ் கட்டிகள் இருப்பது தெரியவந்திருப்பதால், செவ்வாய் கிரக ஆய்வுகள் ஆர்வத்தை தூண்டியுள்ளன.

கொலஸ்ட்ரால் - குறைப்பது எப்படி ? - பாகம் ஒன்று


உடல் இளைக்க போரடுபவரா நீங்க..
என்ன செய்தாலும் ஒண்ணுமே பலன் இல்லையே என்று வருந்துபவரா நீங்க..
அப்படிஎன்றால் உங்களுக்காகதான் இந்த கட்டுரை
கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் என்று சொல்லறாங்களே அது என்னன்னு முதலில் பாப்போமா?

கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு குடும்பத்தை சேர்ந்த வெள்ளையான மெழுகு போன்ற பொருள். இதுதான் நமக்கு தேவையான பல்வேறு ஹார்மோன்களை (estrogen) மற்றும் வைட்டமின் D போன்ற முக்கியமான தயாரிக்க உதவுது.

ஆமா இந்த கொலஸ்ட்ரால் எப்படி வருது என்று தானே கேட்குறீங்க.
நமக்கு கொலஸ்ட்ரால் இரண்டு விதமாக கிடைக்குது.
1. நம்முடைய உடம்புலேர்ந்தே உருவாக்கப்படுது. நம் கல்லீரல் (Liver) சுமார் 1000 மில்லிக்ரம் கொலஸ்ட்ரால் ஒரு நாளைக்கு உருவாக்குது.
2. நாம் சாப்பிடும் உணவிலிருந்து.. முக்கியாமா அசைவ உணவுகள், பால், முட்டை போன்றவைகள்.

முக்கியாம ஒன்னு காய்கறிகள், பழங்கள், இதுலல்லாம் கொலஸ்ட்ரால் கிடையாது.

சரி சரி மிச்சத்தை அப்புறம் பார்ப்போமா?
பசிக்குது.. பிரியாணி சாப்பிடனும்