பூவ. பூவ. பூவ.. பூவே..


டிஸ்கி: நம்ம நண்பர்கள் ரகு, சிவா, ஜீவா - இவர்கள் எப்பொழுது தொல்லைபேசினாலும் கேட்கும் கேள்வி - ஏன் உன் வலை பெயரை பூக்காதலன் என்று வைத்தாய் என்று.

ப்லொக்கிற்கு வந்து , ஒரு கமெண்ட் கூட போடாம போறதில்லாமல் கேள்வி வேற இதில. இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா.

ஓகே கொசு மருந்து அடிக்கும் நேரம்.

சிறு வயதிலிருந்தே பூக்களை கண்டால் ஒரு காதல். ஜவர்ஹர்லால் நேருவின் வரலாறை கேட்டபின், ரோஜாப்பூவை சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்.

அதற்காக ரோஜா வாங்க அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கி செல்வேன். காசு கிடைக்காத நேரத்தில் ரோட்டோர பூக்கள் தான் எனக்கு ரோசாப்பூ.

அப்படி பூக்களின் மேல் காதல் கொண்டு பூபாளம் பாடி திரிந்த நாளது.

வாலிப வயது வந்தும் அந்த ஆசை விடவில்லை.
எங்கு பூவை பார்த்தாலும் அதில் மயங்கி சில நேரம் அங்கேயே இருந்து விடுவேன்.

என்னமோ தெரியலே.
கள்ளம் கபடமற்ற வண்ண வண்ண பூக்களை பார்க்கும் பொழுது மனது அனைத்தும் மறந்து உற்சாகத்தில் சிரிக்கிறது.

என்னை விரும்பியவர்களும், நான் விரும்பியவரின் பெயரும் கூட பூ பெயரோடு அமைந்ததால் பூக்களின் மேல் உள்ள காதல் தொடர்கிறது.

புகைப்படமும் புது கவி பாடும்.

புகைப்படம் எடுப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒன்றி விட்ட ஒன்று.


நான் சிறுவனாக இருந்த பொழுது புகைப்படம் எடுக்கணும் என்றால் "மொட்டை மாடிக்கு போங்கடா அங்குதான் நல்ல வெளிச்சம் வரும்" என்று அம்மா சொல்வார்கள். ஏனென்றால் அந்த கேமராவில் பிளாஷ் வசதி கிடையாது. இத்தனைக்கும் அது ஒரு சிங்கப்பூர் கேமரா.

அந்த காலமெல்லாம் போய் இப்பொழுது வண்ணமயமாக கை அடக்க கேமரா எல்லாம் புழக்கத்தில் வந்து விட்டது.

மேலும் அதனை கொண்டு கவிதை பாட வைக்கும் புகைப்படங்கள் எல்லாம் எடுக்கிறார்கள். இதோ சாம்பிள்.


நான் எங்கு சென்றாலும் நீ என்னோடு தான்



ஏனென்றால் உன்னிடம் உள்ளது தீ..


நீ முகத்தை மறைத்தாலும் உன் உருவம் என்றும் மறையாது.


சூரியன் சுட்டு விடும் தூரம் தான்.

அப்படி இருக்க உன்னை காண இதோ நான் சிறகடித்து பறக்கிறேன்.



உன்னை நேரிலும் இப்படி ... (சென்சார் செய்யப்படுகிறது..)


படித்ததில் பிடித்தது..


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சமபாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
நன்றி: சகோதரர் சித்திக்

தாகம் தீர்க்கும் பறவை.

யார் சொன்னது பறவைகளுக்கு சிந்திக்கும் சக்தி இல்லை என்று?

இங்கே பாருங்கள் தாகம் எடுக்கும் தன் சக தோழிக்கு, எப்படி அருமையாக தண்ணீர் திறந்து விடுவதை. அதுவும் எப்படி? அதற்க்கு தேவையான அளவு.
இதையெல்லாம் காணும் பொழுது, மனிதர்களை விட பறவைகள், மிருகங்களே மேல் என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

யோகா கற்பிக்கும் சிறுவன்

பல வித நோய்களையும் கட்டுக்குள் வைக்கும் ஒரு அறிய பயிற்ச்சி, நம் முன்னோர்கள் அறிமுகப்படுத்திய "யோகா".

உடற்பயிற்ச்சி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நான், யோகா பயிற்சியின் போது அந்த பயிற்ச்சிகளை சரி வர செய்ய இயலாமல் கஷ்டப்பட்டதும் (சும்மா சொல்ல கூடாது எங்கள் வகுப்பில் எல்லோருமே கஷ்டப்பட்டோம்), ஒரு சிறுவன் எல்லா ஆசனங்களையும் அழகாக செய்ததும் ஞாபகம் வருகிறது.

அப்படி சிறந்த முறையில் செய்யும் ஒரு சிறுவனே வகுப்பு ஆசிரியராய் வந்தால்..

மயக்கும் இறகு ஓவியங்கள்

பறவைகள் பார்க்க பார்க்க திகட்டாதவை. அதற்கு முக்கிய காரணமாக விளங்குபவை அதன் அழகிய சிறகுகள். உதிர்ந்து கிடக்கும் அவற்றை "பொக்கிசமாக" சிறுவயதில் பாதுகாத்து வந்தது ஞாபகம் வருகிறது.

அப்படி சாதாரணமாக கிடக்கும் சிறகுகளே அழகாக இருக்கும் போது, அதில் அழகுக்கு அழகு சேர்த்தால் போல் வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்தால், அட அட நினைத்தாலே இன்பமாக உள்ளது அல்லவா?

பார்த்து மகிழுங்கள். கண்ட பின் தாங்கள் இன்ஸ்டன்ட் தத்துபித்து கவிஞர் ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல.


அமெரிக்காவின் தேர்தலில் உபயோகித்தால் வெற்றி நிச்சயம்.

பறவைகள், விலங்குகள் பார்க்க பார்க்க பரவசம்.

பனி கரடிகள், மீன்கள் கூட.


துரத்தும் நரிகள், உடற்பயிற்சியை வலியுறுத்தும் கரடிகள் .

குடும்ப ஒற்றுமையை எடுத்து காட்டும் பறவைகள், விலங்குகள் .


என்னது போதவில்லையா, இதோ மேலும்.

பறவைகள், விலங்குகள் சரி, மனிதர்கள் எங்கே என்று கேட்ப்பவர்களுக்காக இதோ.





அழகு ஓவியங்களை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சுரேசுக்கு நன்றி.




பதினாறும் பெற்று ...

தமிழர் திருமணங்களுக்கு சென்றால் நிச்சயமாக இந்த வாழ்த்து உங்களின் காதில் விழும். "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று.

சிறு வயதில் இப்படி வாழ்த்தை கேட்டால் "பதினாறு பிள்ளைகள் பெற சொல்றாங்களோ" என்று நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ததுண்டு.

ஆமாம் இந்த பதினாறும் என்றால் என்ன? பதினாறு பேறு (செல்வங்கள்) என்பது மட்டும் தெரியும். ஆனால் இந்த செல்வங்கள்தான் என்ன. எனக்குள் தூங்கி இருந்த அந்த ஜேம்ஸ் பாண்டை எழுப்பி விட்டேன்.

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு போன பொது அப்படி சொல்லி மணமக்களை வாழ்த்திய ஒரு பெரியவரை பிடித்து கேட்டப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா. "பரம்பரை பரம்பரையாய் இப்படித்தான்பா வாழ்த்துறோம். முதியோர்கள் சொன்னால் நல்லதாகத்தான் இருக்கும். அதுக்கு காரியம் காரணம் எல்லாம் ஆராய கூடாது".

என்னடா இது பெரிய வம்பா போச்சு.. தெரிந்துக்கொள்ளலாம்னு கேட்டால் இப்படி சொல்லிட்டறேன்னு வருத்தம். ஆனாலும் "தனது முயற்சியிலிருந்து சிறிதும் தவறாத விக்கிரமாதித்தன் போல்" நானும் எனது ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.

அப்படி அலைந்த போதுதான், என் நண்பன் ஒருவன் திருநள்ளாறு கோவிலில் பார்த்ததாக இந்த போட்டோவை கொடுத்தான். இதில் அந்த பதினாறு செல்வங்களை பற்றியும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

பணம் பொருள்தான் செல்வம் என நினைக்கும் இந்த காலத்தில் எது உண்மையான செல்வம் என்பதை. பாருங்கள் நம் முன்னோர்கள் எவ்வளவு அர்த்தப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள் என்று..

இந்த கட்டுரைக்கு காரணமாக இருந்த சித்தி முனிராவுக்கு நன்றி.