ரங்கமணி சுந்தரம் பத்தி உனக்கு தெரியுமா?


இன்னைக்கு ஒரு அவசியமாக தெரிஞ்சுக்க வேண்டியதை பற்றி கொஞ்சம் பேசுவோமா? ஏண்டா, எல்லாரும்தான் இப்படி சொல்லி அறுக்கிரானு இங்கு வந்தால் நீயுமாடா என்று கேட்க்காதீங்கோ. தொடர்ந்து படிங்க..




நாமெல்லாம் எத்தனயோ விஷயத்தை மும்முரமாக செய்து முடிப்போம். ஆனால் முக்கியமான விஷயம் நம்மை விட்டு போவது தெரியாது. காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டியது தான். அதுக்காக சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமல் இருக்க கூடாது.

இப்ப என்னதான் சொல்ல வர்ற என்று கட்டை தூக்காதீங்கப்பா. இதோ இந்த ஜோக்கை படிங்க எல்லாம் புரியும். (அனுப்பிய சகோதரர் சித்திக்கிற்கு நன்றிங்கோ)

ராஜன்: ரவி, நான் கடந்த 6 மாதமா இரவு வகுப்பிற்கு போறேன் தெரியுமோ? அடுத்த மாதம் தேர்வு கூட வருது.
ரவி: ஓஹோ அப்படியா..

ராஜன்: ஒன்ன்னு கேட்குறேன் சொல்லு, தாமஸ் ஆல்வா எடிசன் யாருன்னு?
ரவி: அல்வா தெரியும். யாரு அந்த ஆல்வா?
ராஜன்: என்ன நீ? அவர்தான் மின்சார விளக்கை கண்டு பிடிச்சவரு. நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

அடுத்த நாள்:
ராஜன்: ரோவ்லிங் யாருன்னு தெரியுமா உனக்கு?
ரவி: தெரியாது.
ராஜன்: அவர்தான் இந்த குழந்தைங்கல்லாம் விரும்பி படிக்குதே அந்த ஹேரி பாட்டர் என்ற நாவலை எழுதியவர். நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

அடுத்த நாள்:
ராஜன்: டான் பிரவுன் யாருன்னாவது தெரியுமா?
ரவி: தெரியாது.
ராஜன்: ஐயோ ஐயோ இது கூட உனக்கு தெரியலையே, நீயெல்லாம் என்ன பண்ண போற. அவர்தான் டாவின்சி கோடு என்ற துப்பறியும் நாவலை எழுதியவர். நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

ரவி கடுப்பாக: அது சரி ரங்கமணி சுந்தரம் பத்தி உனக்கு தெரியுமா?
ராஜன்: (சிறிது யோசிச்சு விட்டு) தெரியாது.
ரவி: அவர்தான் உன் பொண்டாட்டிகூட நீ இல்லாத சமயம் சுத்தறவர். நீ இரவு வகுப்பிற்கு போகாமல் இருந்தால், உனக்கு அது தெரிஞ்சிருக்கும்.




இப்ப தெரியுதா நான் என்ன சொல்றேன்னு. பாத்து நடந்துக்கிங்கப்பா.

அட்ராடா நாக்க முக்க..

(டிஸ்கி: என்ன புது பதிவே இல்லை என்று உரிமையோடு ஈமெயில் அனுப்பிய தம்பி சித்திக்கின் வேண்டுகோளை ஏற்று)

சின்ன வயசிலே, "உன்னாலே (உன்) நாக்கால் (உன்) மூக்கை தொட முடியுமா?" என்று கேட்பதும், கேட்க்கப்படுவதும் - அதற்காக சற்றும் தளரா விக்கிரமாதித்தன் போல் பல முயற்சி செய்வதும் உண்டு. என்னதான் முயன்றாலும் மூக்கை கொஞ்சமாவாது அழுத்தினால்தான், அதன் நுனியையாவது தொட முடியும்.

ஆனால் ஜெர்மனியில் ஹாம்பார்கு (Hamburg) அருகே வசிக்கும் இந்த 12 வயது சிறுமியோ வெகு இலகுவாக தன் நாக்கால் மூக்கை மட்டுமல்ல, நெற்றியையே தொட்டு விடுகிறார். ஆம் இந்த கின்னஸ் சாதனை படைத்த இவரது நாக்கின் நீளம் 7 cm.


சாதாரணமாகவே பெரும்பாலான பெண்களை அதிகம் பேசுவதால் "உனக்கு வாய் ரொம்ப நீளம்" என்று கூறுவதுண்டு. ஆனால் இவரிடம் கொஞ்சம் மாற்றி "உனக்கு நாக்கு ரொம்ப நீளம்" என்று சொல்வார்களோ.

ஹையோ ஹையோ. இது என்ன சின்னப்புள்ளை தனமா இருக்கு என்றெல்லாம் கேட்க்க கூடாது.

அமெரிக்க குழந்தையும், ஆப்பிரிக்க டீவியும்

டிஸ்கி: ஏன்பா.. எப்பொழுதும் ஜாலி பதிவு தானா? கொஞ்சம் சீரியஸா எழுதக்கூடாதா என்று கேட்ட என் வலையுலக நண்பர்களுக்கு இது சமர்ப்பணம்.

உங்களை சுற்றி பாருங்கள். (சுத்தி இல்லப்பா..) எங்கு பார்த்தாலும் பொருளியல் சுருங்கி விட்டது. வேலைகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இருக்கும் வேலைக்கே ஆபத்து என கூக்குரல்கள்.

உலகத்தில் நடப்பதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியல்லைன்னாலும், பொருளியல் தாக்கத்தினால் ஏற்படும் இந்த சுனாமியிலிருந்து எப்படி பாது காத்து கொள்ளோணும் என்பது நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சமாச்சாரம். இல்லையென்றால் மன உளைச்சலும் அதனால் ஏற்படும் நோய்களும் தான் மிச்சம். வருமானமே குறைவாக உள்ள இந்த கால கட்டத்தில், டாக்டருக்கு வேறு அழனுமா என்ன?

சரி சரி என்ன செய்யலாம் சொல்லு என்றுதானே கேட்க்குறீங்க.. இதோ பிடியுங்கள் முத்துக்கள் மூன்று.

1. தேவைகளை குறைத்து கொள்ளணும். தேவைகளே குறைக்க சொல்லும் போது ஆசைகளை பத்தி யாருப்பா அங்கே பேசுறது.. மூச்..

2. வரவுக்கேத்த செலவு என்பதை மாற்றி வரவின் பாதி தான் செலவு என்று மாற்றிகொன்று வாழ வேண்டும். 10 டாலர் சம்பாதித்தால், 5 டாலர் தான் செலவு செய்யோணும். மீதியை பற்றி பேச கூடாது. பத்திரமா அதை வங்கியில் போடலாம். கஷ்ட காலத்தில் உதவும்.

3. முக்கியமாக எது செய்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளை குடும்பத்தில் நன்கு விளக்கி (யாருப்பா அது சோப்பு தூள் தேடுறது..) அவர்களின் ஆதரவோடு செய்யனும்.

இதெல்லாம் கடை பிடித்தால், இந்த பிரச்சினையெல்லாம் நமக்கு ஜுஜுபீ.

இந்த நேரத்தில் பொருளியல் மோசத்தை கூற ஒருவர் கூறியதை இங்கு கூறனும்.

"பொருளியல் மிகவும் மோசம் எப்படின்னா -
அமெரிக்க குழந்தையை தத்து எடுத்துக்கோங்க என்று
ஆப்பிரிக்க டீவியில் விளம்பரம் வருகிறது"

உயிரை காப்பற்றிய மார்பு கச்சை..

Under wire bra

பெண்களுக்கு மார்பு கச்சை (Bra) அத்தியாவசியமான ஆடைகளில் ஒன்று. தேவைக்கு என்று ஆரம்பித்த இது இப்பொழுதெல்லாம் அலங்கார பொருட்களில் ஒன்றாகிவிட்டது.

வித விதமான கச்சைகள் இப்பொழுது காலத்திற்கேற்ப தினம் தினம் பல்வேறு உருவில் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி சாதரணமாக உள்ள ஒன்று ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் இது நடந்தது யூ எஸ்சில் உள்ள டெட்ராய்ட்(Detroit) என்ற நகரில். அங்குள்ள 57 வயது பவுச்டினா கிரீன் (Faustina Green) என்ற மாது தமது பக்கத்து வீட்டில் 3 இளைஞர்கள் அத்து மீறி நுழைவதை கண்டார்.

கொள்ளையர்கள் தங்களது இலக்கை வெற்றிகரமாக முடித்து விட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது, அந்த மாது தங்களை பார்ப்பதை அறிந்த கொள்ளையர்களில் ஒருவன் அந்த மாதின் மார்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால் அந்த குண்டு அவரை சிதைக்காமல் அவரின் மேல் பட்டு விலகி சென்றது (இங்கு நடிகர் விஜயகாந்த் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல) .

கொள்ளை செய்தி அறிந்த வந்த காவலர்கள் இந்த செய்தி அறிந்து விசாரிக்க அவர் அணிந்து இருந்த மார்பு கச்சை தான் அவரின் உயிரை கைப்பற்றியதை அறிந்தார்கள். இதை பற்றி மேலும் கூறிய அந்த காவலர்கள் அவர் அணிந்து இருந்தது அண்டர் வயர் மார்பு கச்சை (Under wire) என்று அதில் உள்ள அந்த வயர்தான் குண்டை தடுத்தது என்றும் கூறினார்கள்.

இதை அறிந்த அங்குள்ள மக்கள் "அது நிச்சயமாக ஒரு அற்புதமான மார்பு கச்சைதான். இனிமேல் நாங்கள் இந்த வகை கச்சை தான் வாங்க போகிறோம்" என்று கூறினார்களாம்.

ஆக மார்பு கச்சை மானத்தை மட்டும் அல்ல, உயிரையும் காப்பாற்றும் என்பதை இங்கு உரக்க கூவிக்கொள்கிறேன்.

ஆமாம் கமெண்டு கூட போடாமல், அப்படி எங்க நீங்க அவசரமாய் போறீங்க? என்னது அண்டர் வயர் மார்பு கச்சை வாங்கவா?

நல்லா இருங்கப்பூ.

தட்டி கொடுத்த குங்குமத்திற்கு நன்றி.


அன்புத்தாயின் தீடீர் மறைவு என்னை நிலை குலைய வைத்தது. எப்பொழுதும் கும்மாளம், கிண்டல் கேலி என வாழ்க்கையின் சந்தோசங்களை அணு அணுவாக ருசித்த எனக்கு இது ஒரு மிக சிறந்த "Wakeup call" . இதனால் வலை உலகத்திற்கு கூட வராமல் இருந்து வந்தேன்.

என்னை தேடி இவ்வலை தளத்திற்கு வந்து ஏமாந்த அன்பு நெஞ்சங்கள் என்னை மன்னிப்பார்களாக. (யாரது அங்கே "இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தோம்" என குரல் கொடுப்பது")

இந்த நேரத்தில் எனது "தொண தொணக்கும் மனைவியை விற்க நினைத்தவர்" என்ற பதிவு சமிபத்திய குங்குமம் இதழில் வந்துள்ளது.

என்னை போன்ற சாதாரண பதிவர்களையும் அங்கீகரித்த குங்குமத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி. தளர்ந்த மனதிற்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட சிறந்த டானிக்.
குங்குமத்தில் பூக்காதலன்

முதல் பகுதியிலேயே இடம் பிடித்த என் சக பதிவர்கள் சுறு சுறுப்பாய் பல சுவையான பதிவுகளை தரும் நண்பர் சோம்பேறி மற்றும் வலை உலகங்களால் "அண்ணாச்சி" என அன்புடன் அழைக்கப்படும் வடகரை வேலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அவங்களுக்கு முன்னால் நானெல்லாம் ஒரு ஜுஜுபீ.

தொண தொணக்கும் மனைவியை விற்க நினைத்தவர்


திருமதிகளின் தொண தொணப்பு என்பது திருமண வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று.

சில திருமதிகளுக்கு தொண தொணக்கா விட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. இவர்களெல்லாம் தமது துணைவனை அடக்கி ஆள நினைப்பவர்கள்.

சில துணைவர்களுக்கோ, தன் மனைவி ஏதும் சொல்லவில்லை என்றால் ஏதோ ஒன்று தொலைந்தது போல் கவலை கொள்வர். தொண தொணப்பாவது பரவாயில்லை, வேறு எதுவும் நடந்து விடுமோ என்ற கவலை அவர்களுக்கு.

ஆனால் இந்த தொண தொணப்பு ஒரு அளவோடு இருக்க வேண்டும். இல்லையென்றால்..

லண்டனில் நடந்த ஒரு சம்பவம். 38 வயது கேரி பய்த்ஸ் (Gary bates) என்பவர், தனது 40௦ வயது துணைவி டோன்னாவுடைய (Donna) தொண தொணப்பு தாங்க முடியாமல் இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்தார்.

தொண தொணக்கும் மனைவி
வரி இல்லை.
அதிக பாதுகாப்புக்கு செலவு - சிறிது துருவுடன்.

இதில் முக்கியமான் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு திருமணம் சென்ற ஆண்டுதான் நடந்ததாம்.

கொடுமை என்ன வென்றால் சுமார் இதுவரை பத்து பேர் அவருக்கு தொலை பேசி "அவர் இன்னும் உங்களிடம் இருக்கிறாரா?" என்று கேட்டார்களாம்.

பூவ. பூவ. பூவ.. பூவே..


டிஸ்கி: நம்ம நண்பர்கள் ரகு, சிவா, ஜீவா - இவர்கள் எப்பொழுது தொல்லைபேசினாலும் கேட்கும் கேள்வி - ஏன் உன் வலை பெயரை பூக்காதலன் என்று வைத்தாய் என்று.

ப்லொக்கிற்கு வந்து , ஒரு கமெண்ட் கூட போடாம போறதில்லாமல் கேள்வி வேற இதில. இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா.

ஓகே கொசு மருந்து அடிக்கும் நேரம்.

சிறு வயதிலிருந்தே பூக்களை கண்டால் ஒரு காதல். ஜவர்ஹர்லால் நேருவின் வரலாறை கேட்டபின், ரோஜாப்பூவை சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்.

அதற்காக ரோஜா வாங்க அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கி செல்வேன். காசு கிடைக்காத நேரத்தில் ரோட்டோர பூக்கள் தான் எனக்கு ரோசாப்பூ.

அப்படி பூக்களின் மேல் காதல் கொண்டு பூபாளம் பாடி திரிந்த நாளது.

வாலிப வயது வந்தும் அந்த ஆசை விடவில்லை.
எங்கு பூவை பார்த்தாலும் அதில் மயங்கி சில நேரம் அங்கேயே இருந்து விடுவேன்.

என்னமோ தெரியலே.
கள்ளம் கபடமற்ற வண்ண வண்ண பூக்களை பார்க்கும் பொழுது மனது அனைத்தும் மறந்து உற்சாகத்தில் சிரிக்கிறது.

என்னை விரும்பியவர்களும், நான் விரும்பியவரின் பெயரும் கூட பூ பெயரோடு அமைந்ததால் பூக்களின் மேல் உள்ள காதல் தொடர்கிறது.

புகைப்படமும் புது கவி பாடும்.

புகைப்படம் எடுப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒன்றி விட்ட ஒன்று.


நான் சிறுவனாக இருந்த பொழுது புகைப்படம் எடுக்கணும் என்றால் "மொட்டை மாடிக்கு போங்கடா அங்குதான் நல்ல வெளிச்சம் வரும்" என்று அம்மா சொல்வார்கள். ஏனென்றால் அந்த கேமராவில் பிளாஷ் வசதி கிடையாது. இத்தனைக்கும் அது ஒரு சிங்கப்பூர் கேமரா.

அந்த காலமெல்லாம் போய் இப்பொழுது வண்ணமயமாக கை அடக்க கேமரா எல்லாம் புழக்கத்தில் வந்து விட்டது.

மேலும் அதனை கொண்டு கவிதை பாட வைக்கும் புகைப்படங்கள் எல்லாம் எடுக்கிறார்கள். இதோ சாம்பிள்.


நான் எங்கு சென்றாலும் நீ என்னோடு தான்



ஏனென்றால் உன்னிடம் உள்ளது தீ..


நீ முகத்தை மறைத்தாலும் உன் உருவம் என்றும் மறையாது.


சூரியன் சுட்டு விடும் தூரம் தான்.

அப்படி இருக்க உன்னை காண இதோ நான் சிறகடித்து பறக்கிறேன்.



உன்னை நேரிலும் இப்படி ... (சென்சார் செய்யப்படுகிறது..)


படித்ததில் பிடித்தது..


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சமபாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
நன்றி: சகோதரர் சித்திக்

தாகம் தீர்க்கும் பறவை.

யார் சொன்னது பறவைகளுக்கு சிந்திக்கும் சக்தி இல்லை என்று?

இங்கே பாருங்கள் தாகம் எடுக்கும் தன் சக தோழிக்கு, எப்படி அருமையாக தண்ணீர் திறந்து விடுவதை. அதுவும் எப்படி? அதற்க்கு தேவையான அளவு.
இதையெல்லாம் காணும் பொழுது, மனிதர்களை விட பறவைகள், மிருகங்களே மேல் என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?