ரங்கமணி சுந்தரம் பத்தி உனக்கு தெரியுமா?


இன்னைக்கு ஒரு அவசியமாக தெரிஞ்சுக்க வேண்டியதை பற்றி கொஞ்சம் பேசுவோமா? ஏண்டா, எல்லாரும்தான் இப்படி சொல்லி அறுக்கிரானு இங்கு வந்தால் நீயுமாடா என்று கேட்க்காதீங்கோ. தொடர்ந்து படிங்க..




நாமெல்லாம் எத்தனயோ விஷயத்தை மும்முரமாக செய்து முடிப்போம். ஆனால் முக்கியமான விஷயம் நம்மை விட்டு போவது தெரியாது. காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டியது தான். அதுக்காக சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமல் இருக்க கூடாது.

இப்ப என்னதான் சொல்ல வர்ற என்று கட்டை தூக்காதீங்கப்பா. இதோ இந்த ஜோக்கை படிங்க எல்லாம் புரியும். (அனுப்பிய சகோதரர் சித்திக்கிற்கு நன்றிங்கோ)

ராஜன்: ரவி, நான் கடந்த 6 மாதமா இரவு வகுப்பிற்கு போறேன் தெரியுமோ? அடுத்த மாதம் தேர்வு கூட வருது.
ரவி: ஓஹோ அப்படியா..

ராஜன்: ஒன்ன்னு கேட்குறேன் சொல்லு, தாமஸ் ஆல்வா எடிசன் யாருன்னு?
ரவி: அல்வா தெரியும். யாரு அந்த ஆல்வா?
ராஜன்: என்ன நீ? அவர்தான் மின்சார விளக்கை கண்டு பிடிச்சவரு. நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

அடுத்த நாள்:
ராஜன்: ரோவ்லிங் யாருன்னு தெரியுமா உனக்கு?
ரவி: தெரியாது.
ராஜன்: அவர்தான் இந்த குழந்தைங்கல்லாம் விரும்பி படிக்குதே அந்த ஹேரி பாட்டர் என்ற நாவலை எழுதியவர். நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

அடுத்த நாள்:
ராஜன்: டான் பிரவுன் யாருன்னாவது தெரியுமா?
ரவி: தெரியாது.
ராஜன்: ஐயோ ஐயோ இது கூட உனக்கு தெரியலையே, நீயெல்லாம் என்ன பண்ண போற. அவர்தான் டாவின்சி கோடு என்ற துப்பறியும் நாவலை எழுதியவர். நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

ரவி கடுப்பாக: அது சரி ரங்கமணி சுந்தரம் பத்தி உனக்கு தெரியுமா?
ராஜன்: (சிறிது யோசிச்சு விட்டு) தெரியாது.
ரவி: அவர்தான் உன் பொண்டாட்டிகூட நீ இல்லாத சமயம் சுத்தறவர். நீ இரவு வகுப்பிற்கு போகாமல் இருந்தால், உனக்கு அது தெரிஞ்சிருக்கும்.




இப்ப தெரியுதா நான் என்ன சொல்றேன்னு. பாத்து நடந்துக்கிங்கப்பா.

அட்ராடா நாக்க முக்க..

(டிஸ்கி: என்ன புது பதிவே இல்லை என்று உரிமையோடு ஈமெயில் அனுப்பிய தம்பி சித்திக்கின் வேண்டுகோளை ஏற்று)

சின்ன வயசிலே, "உன்னாலே (உன்) நாக்கால் (உன்) மூக்கை தொட முடியுமா?" என்று கேட்பதும், கேட்க்கப்படுவதும் - அதற்காக சற்றும் தளரா விக்கிரமாதித்தன் போல் பல முயற்சி செய்வதும் உண்டு. என்னதான் முயன்றாலும் மூக்கை கொஞ்சமாவாது அழுத்தினால்தான், அதன் நுனியையாவது தொட முடியும்.

ஆனால் ஜெர்மனியில் ஹாம்பார்கு (Hamburg) அருகே வசிக்கும் இந்த 12 வயது சிறுமியோ வெகு இலகுவாக தன் நாக்கால் மூக்கை மட்டுமல்ல, நெற்றியையே தொட்டு விடுகிறார். ஆம் இந்த கின்னஸ் சாதனை படைத்த இவரது நாக்கின் நீளம் 7 cm.


சாதாரணமாகவே பெரும்பாலான பெண்களை அதிகம் பேசுவதால் "உனக்கு வாய் ரொம்ப நீளம்" என்று கூறுவதுண்டு. ஆனால் இவரிடம் கொஞ்சம் மாற்றி "உனக்கு நாக்கு ரொம்ப நீளம்" என்று சொல்வார்களோ.

ஹையோ ஹையோ. இது என்ன சின்னப்புள்ளை தனமா இருக்கு என்றெல்லாம் கேட்க்க கூடாது.