அமெரிக்காவின் டாலர்

அமெரிக்காவின் பண மதிப்பு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மெலிந்து கொண்டிருக்கும் வேளையில் அதை பற்றி சகோதரர் சித்திக் அனுப்பிய கார்ட்டுன்.

டாலருக்கே தன் நிலையை நினைத்து கவலையாக இருக்கிறதாம்.


இன நிற வேற்றுமைக்கு எதிராக ஒரு சவுக்கடி

இன வேற்றுமைக்கு எதிராக பல நாடுகளும் பல நேரங்களில் குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், அங்கெங்கே இன துவேசங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை எப்படி முழுமையாக ஒழிப்பது என்று பலரும் பல விதமாக முயன்று கொண்டிருக்கும் வேளையில் இதோ ஒரு அழகிய உதாரணம்.

பிரிட்டிஷ் தாயிற்கு 2000-இல் பிறந்த இரட்டை குழ்ந்தைகளை பாருங்கள். ஒன்று கருப்பு இனமாகவும் ஒன்று வெள்ளை இனமாகவும் பிறந்துள்ளதை.

தாய் தகப்பன் இருவருமே ஒரு கலப்பு திருமணத்தில் உதித்தவர்கள். (வெள்ளை இன தாய், கருப்பு இன தகப்பன்)



வினோத பொருட்கள்

"ஜப்பானில் தான் இது நடக்கும்" என கூறி நண்பரிடமிருந்து ஒரு ஈ மெயில் வந்தது.. அது இதோ உங்களின் பார்வைக்கு..

காதலன் இல்லாமல் தூங்க முடியவில்லையா? உங்களின் கவலை தீர்க்க இதோ..


என்னது மூக்கு ரொம்ப ஒழுவுகிறதா.. எவ்வளவு கைக்குட்டை எடுத்து செல்வது என புலம்புபவரா நீங்கள்... உங்களுக்காக

இந்த மழை நான் புது செருப்பு போட்டு செல்லும்போதுதான் வரணுமா.. அவ்வளவுதான் என் செருப்பு என வருந்துபவரா..


என்னது உங்கள் அருமை குழ்ந்தை காலை ரொட்டி சாப்பிட அடம் பிடிக்கிறதா.. உங்கள் கவலை தீர்க்க..


அவசரமாக ஆபீஸ் போகணும். சாப்பிடாமலும் போக முடியாது ஆனா இந்த உணவு இப்படி கொதிக்கிறதே.. அதுதானே உங்கள் கவலை.. உங்களுக்காக இதோ..



இந்த ட்ரைனில் போகும் நேரமாவது துங்கலாம் என்றால் இப்படி ஆடி ஆடி பக்கத்தில் உள்ளவரின் மேல் விழுந்து விடுவோமோ.. உங்கள் கவலை தீர்க்க







உங்கள் பிரட்டின் மேல் பட்டர் எளிதில் தடவ..


ஆமாம் உங்களுக்கு பிடித்த பொருள் எது..??



சோயா பீன் சாப்பிடுபவர்களுக்கு உயிர் அணு குறையும்


கேன்செர் உருவாவதை தடுக்கும்னும், உயர் அழுத்தத்தை கட்டுப்படுத்தும்னும் கூவி கூவி வித்ததாலே நான் என் உணவில் சோயா பீன் உணவை பெரும்பாலும் சேர்த்து சாப்பிடுவேன்..


ஆனால் அதுக்கு மணி அடிக்கிற மாறி அமெரிக்காவிலே ஒரு ஆராய்ச்சி செய்திருக்கானுவோ.. அது என்னன்னா..


சோயா பீன் சாப்பிடுபவர்களையும் சாப்பிடுபவர்களையும், சாப்பிடதவர்களையும் அவர்களின் உயிர் அணுவை (Sperm) எடுத்து சோதனை செய்திரிக்கானுவோ.. (பாருங்க இவங்களின் வேலையை..) முடிவு என்ன ஆச்சின்னா சோயா பீன் சாப்பிட்டவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கை சோயா பீன் சாப்பிடதவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததாம்.. மேலே சோதிச்சதிலே, சோயா பீனில் பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் "ஈஸ்ட்ரஜன்" (Oestrogen) அதிகமாக இருந்தது தெரிய வந்ததாம்.


ஒரு ஆண்மகனுக்கு உயிர் அணுவின் எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு 80 முதல் 120 மில்லியன் இருக்கும். 20 மில்லியனுக்கு குறைந்தால் அவர் மூலம் வாரிசு உண்டாகுவது கடினம்..


இந்த சோயா பீனானது இந்த உயிர் அணுக்களின் எண்ணிக்கையை குறைக்க வல்லதாம்.. ஆக அதிகம் சோயா பீன் சாப்பிட்டால் அவ்வளவுதான் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்..
ஆண்மகன்களே உசாரயிருங்கள். இல்லன்னா குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை இல்லாமலே, எல்லாம் முடிந்து விடும்..

எப்படி எல்லாம் பீதியை கிளப்புறாங்கப்பா..
இனிமேல் நான் சோயா பீன் சாப்பிடுவேன்..??
பாவம் இந்த சோயா பீன் கடைகள்..