குழந்தையின் அசாத்தியமான டான்ஸ்

குழந்தைகள் ஒரு டேப் ரெகார்டர் மாதிரி. பார்க்க கூடிய கேட்கக்கூடிய விசயங்களை திரும்ப செய்து காட்டி விடுவர். அவர்களை அழகிய முகம் பார்க்கும் கண்ணாடி எனவும் கூறலாம். அதனால் தான் குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் சிறிய சச்சரவில் கூட ஈடுபட கூடாது எனலாம்.

இங்கு பாருங்கள் ஒரு குழந்தை செய்யும் லூட்டிகளை. அவன் அடிக்கும் பல்டி என்ன.. ஆடும் டான்ஸ் என்ன. மனதை கொள்ளை கொண்டு விடுகிறான்.


கொத்து கொத்தாய்...

வாழைக்கொத்து பார்த்திருக்கிறீர்களா? இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.



கொஞ்சம் பொறுமையாக கீழுள்ள படத்தை கொஞ்சம் பாருங்கோ.. அப்புறம் தெரியும் இதில் என்ன புதுமை என்று.. பாருங்கள் அதிசயத்தை கொத்து மரத்திலிருந்து பூமி வரை எப்படி வளர்ந்துள்ளது என்று...



படத்தை அனுப்பிய சகோதரர் சித்திக்குக்கு நன்றி.

அமெரிக்காவின் தனிமை சிறையில் வாடும் ஒரு இந்தியர்

நேற்று இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். அதை பாங்குடன் நடத்தும் "ரமேஷ்" என்பதிலிருந்து ரோஸ் ஆக மாறியவருக்காக அல்ல அதில் எடுத்துக்கொள்ளப்படும் Controversy விஷயங்கள். Anyway அந்த நிகழ்ச்சிக்கு நான் பரம விசிறி.
நேற்றைய நிகழ்ச்சியில் நாகர்கோவிலிருந்து அமெரிக்கா சென்ற ஆனந்த் ஜோன்ஸ் என்பவரை பற்றி பேசப்பட்டது. ஆனந்த் அங்கு ஒரு மிக சிறந்த Fashion Designer (அலங்கார நிபுணர்!!) . ஹாலிவூட் நடிகைகள் பலருக்கும் ஆடை வடிவமைத்த இளம் நிபுணர். அவர் இப்பொழுது அமெரிக்காவின் தனிமை சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களால் குற்றம் சாற்றப்பட்டுள்ளார். இதில் சில பேர் 18 வயதிற்கும் கீழே உள்ளவர்களும் அடங்கும்.

அங்கு ஒரு இந்தியர் முன்னேறுவது தாங்காமல் தான் அவர் மேல் போலி குற்றம் சாற்றப்பட்டிருப்பதாகவும்,trial கூட இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமை சிறையில் ஒரு போர்வை கூட இல்லாமல் வாடுவதாக அவரது அக்காள் சஞ்சனா ஜோன்ஸ் கண்கலங்க அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

எது எப்படியோ, அவர் குற்றம் செய்தவரோ இல்லையோ, தனி மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சீக்கிரம் அவர் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும். மேலும் சஞ்சனா கூறுவது போல் நிற துவேசம் இருக்குமேயானால் அதை கழைய அந்த அரசு முயல வேண்டும் என்பதே எல்லோரின் அவா.

கம்பெனி கார்

வேலை பார்க்கும் எல்லோருக்கும், பல வித கனவுகள்.
அழகிய வீடு, போயி வர சொகுசு கார் என பல..

அதுவும் அந்த கார் ஒரு மெர்செடெஸ் பென்ஸ் காராக இருந்தால்..

அதில் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள இன்டர்நெட் வசதியுடன் ஒரு லாப் டாப் இருந்தால்..



கொஞ்சம் இளைப்பாற...


நண்பர்களுடன் கதை பேச, கான்பிரன்ஸ் வசதி ...

நண்பிகளுடன் முக்கியமான கம்பெனி விஷயம் (!) மட்டுமே பேச வசதி..



நிறுத்துங்கள் உங்கள் பகல் கனவை..

கிடைத்ததை வைத்து சந்தோசப்படுங்கள்..



அரிசி விலை ஆகாயத்தை நோக்கி

எங்கும் விலைவாசி ஏற்றம், எதிலும் ஏற்றம் என்பது வாடிக்கையாகி விட்டது. பணக்காரர்களுக்கு கவலை இல்லை. எதையும் எந்த விலை கொடுத்ததும் வாங்கி விடலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும்தான் இதனால் மிகவும் வருந்தவேண்டிய நிலையில் உள்ளனர்.

மற்ற பொருள்களை விடுவோம். அத்தியாவசிய பொருள்களான அரிசி கூட யானை விலை, குதிரை விலையில் விற்கிறது. இதை ஒட்டி சகோதரர் சித்திக் ஈ மைலில் அனுப்பிய கார்ட்டூன். நீங்கள் என்ன இதை பற்றி நினைக்கிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் சொல்லலாமே..