சோயா பீன் சாப்பிடுபவர்களுக்கு உயிர் அணு குறையும்


கேன்செர் உருவாவதை தடுக்கும்னும், உயர் அழுத்தத்தை கட்டுப்படுத்தும்னும் கூவி கூவி வித்ததாலே நான் என் உணவில் சோயா பீன் உணவை பெரும்பாலும் சேர்த்து சாப்பிடுவேன்..


ஆனால் அதுக்கு மணி அடிக்கிற மாறி அமெரிக்காவிலே ஒரு ஆராய்ச்சி செய்திருக்கானுவோ.. அது என்னன்னா..


சோயா பீன் சாப்பிடுபவர்களையும் சாப்பிடுபவர்களையும், சாப்பிடதவர்களையும் அவர்களின் உயிர் அணுவை (Sperm) எடுத்து சோதனை செய்திரிக்கானுவோ.. (பாருங்க இவங்களின் வேலையை..) முடிவு என்ன ஆச்சின்னா சோயா பீன் சாப்பிட்டவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கை சோயா பீன் சாப்பிடதவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததாம்.. மேலே சோதிச்சதிலே, சோயா பீனில் பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் "ஈஸ்ட்ரஜன்" (Oestrogen) அதிகமாக இருந்தது தெரிய வந்ததாம்.


ஒரு ஆண்மகனுக்கு உயிர் அணுவின் எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு 80 முதல் 120 மில்லியன் இருக்கும். 20 மில்லியனுக்கு குறைந்தால் அவர் மூலம் வாரிசு உண்டாகுவது கடினம்..


இந்த சோயா பீனானது இந்த உயிர் அணுக்களின் எண்ணிக்கையை குறைக்க வல்லதாம்.. ஆக அதிகம் சோயா பீன் சாப்பிட்டால் அவ்வளவுதான் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்..
ஆண்மகன்களே உசாரயிருங்கள். இல்லன்னா குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை இல்லாமலே, எல்லாம் முடிந்து விடும்..

எப்படி எல்லாம் பீதியை கிளப்புறாங்கப்பா..
இனிமேல் நான் சோயா பீன் சாப்பிடுவேன்..??
பாவம் இந்த சோயா பீன் கடைகள்..


0 நண்பர்கள் பூசை செய்றாங்கோ: