மூளைக்கு வேலை..


ஆமாம் கடைசியா நீங்க எப்போ உங்க மூளைக்கு வேலை கொடுத்தீங்க..
என்னது மூளைன்ன என்னவா?
அப்போ இந்த சமாச்சாரத்தை விட்டு விட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ளுங்கோ.. என்ன ஒகேவா?


ராஜாவுக்கு, ரோஜா மேல ஒரு கண்ணு..
எப்படி மடக்குரதுன்னு தெரியலே..
கணக்கு கேட்டு கணக்கு பண்ணலாம்னு முடிவு பண்ணி அவளிடம் இப்படி கேட்டான்.

எதை சேர்த்தால் 10 ம் 10000 ம் சரி சமமாகும்?
ரோஜா முழிக்க . யை முதலில் சேரு அதாவது .10 = .10000 = 1 ன்னு சொல்லி கெக்க பிக்கன்னு சிரித்தான்.

அப்படியா நான் இப்போ கேட்பதுர்க்கு நீ பதில் சொல்லுன்னு ரோஜா கேட்டாள்
வாரத்திலே உள்ள எதாவது மூன்று தேதிகளின் மொத்தத்தை சொல்லு. நான் நீ எதை தேர்ந்து எடுத்தேன்னு சொல்றேன். ஆனா அந்த தேதிகள் தொடர்ந்து வரக்கூடியதாக இருக்கோணும் அப்படின்னு சொன்னாள்.

ராஜா 45 ன்னு சொல்ல உடனே ரோஜா நீ தேர்ந்து எடுத்தது 14, 15, 16 ன்னு சொன்னாள். இப்போ ராஜா 69 ன்னு சொல்ல உடனே ரோஜா நீ தேர்ந்து எடுத்தது 22, 23, 24 ன்னு சொன்னாள்.

ஆமாம் அவள் எப்படி கண்டு பிடித்தாள்.


இந்தாங்க புடிச்சிக்குங்குங்கோ..

ரோஜா என்ன செய்தான்னா, ராஜா கொடுத்த கூட்டு தொகையை மூன்றால் வகுத்து 45/3 = 15. இதுதான் அந்த தேதிகளின் மத்திய தேதி. ஆக 14, 15, 16 ன்னு சொன்னாள். ராஜா 69 ன்னு சொன்ன போது 69/3 = 23 கணக்கு பண்ணி 22, 23, 24 ன்னு சொன்னாள்.

ஆமாம் நீங்க எங்க போறீங்க?
என்னது உங்க ஆளை கணக்கு பண்ணனுமா!!!



0 நண்பர்கள் பூசை செய்றாங்கோ: